Home » » மனைவி வழியாக யாருக்கு சொத்து சேரும்? (அனுபவ ஜோதிட ஆராய்ச்சி கட்டுரை ) ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

மனைவி வழியாக யாருக்கு சொத்து சேரும்? (அனுபவ ஜோதிட ஆராய்ச்சி கட்டுரை ) ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC


ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம் என்பது தனக்கு வரக்கூடிய மனைவியை பற்றி அறியக்கூடிய இடமாகும் . அதேபோல் ஆண்கள் ஜாதகத்தில் மனைவியை குறிக்க கூடிய கிரகமாக சுக்கிரன் திகழ்கிறார். 

லக்னத்துக்கு ஏழாம் வீட்டுக்கு அதிபதி லாபஸ்தானத்தில் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகர் தனக்கு வரக்கூடிய மனைவி மூலம் லாபத்தை அனுபவிக்க கூடிய பாக்கிய சாலியாக திகழ்வார். 

இப்படி அமைந்து சுக்கிரனும் கேந்திரம் , திரிகோணம் பெற்று நல்ல நிலைமையில் இருந்தால் அந்த ஜாதகர் மனைவி மூலம் பெரும் லாபத்தை அடையக்கூடிய அதிஷ்டசாலியாக திகழ்வார். 


அதே போல் களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அந்த ஜாதகர் தனக்கு வரக்கூடிய மனைவி மூலம் ராஜ போக வாழ்க்கையை அனுபவிப்பார் என்று சொல்லலாம். இங்கே மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன்.

ஜென்ம லக்னத்துக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருந்தால் மட்டும் போதாது. ஏழாம் இடத்து அதிபதியோடு லாபாதிபதி லாபஸ்தானம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் மனைவியால் லாபம்  ஏற்படும்.அப்படி லாபம் சொத்து மூலமாக வரும் என்று சொல்வதற்கு இல்லை. நல்லபடி சம்பாதிக்க கூடிய நிலையில்  வாழ்க்கை துணைவியாக வர முடியும். 

லக்னங்களில் சர லக்னம் , ஸ்திர லக்னம், உபய லக்னம் , என்ற மூன்று வகையான லக்னங்கள் உண்டு. மேஷம் கடகம் - துலாம் -  மகரம் - இந்த லக்னங்கள் சர லக்னங்கள் ஆகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம் , கும்பம் , ஸ்திர லக்னங்கள் ஆகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம்  ,இவை உபய லக்னங்கள் ஆகும். ஜென்ம லக்னம் சர லக்னங்களில் ஒன்றாக இருந்து விட்டால் லாபஸ்தானம் ஏறிய கிரகம் பாதக ஸ்தானம் பெற்றதாகி விடும். 


எனவே சர லக்னகாரர்களுக்கு மனைவியால் லாபம் என சொல்வதற்கு இல்லை. ஸ்திர லக்னங்களான ரிஷபம் சிம்மம் விருச்சிகம் கும்பம் முதலிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு மனைவியால் லாபம் ஏற்படலாம். 

விருச்சிக லக்னத்துக்கு மட்டும் களத்திர அதிபதியான சுக்கிரன் லாபஸ்தானமாகிய கன்னி ராசியில் இருந்தால் சுக்கிரன் நீசம் பெற்ற அமைப்பை பெறுவதால் மனைவியால் லாபம் ஏற்படுமா ? என்ற கேள்வி எழலாம். கேட்க வேண்டிய கேள்விதான் . 

விருச்சிக லக்னகாரர்களுக்கு லாப ஸ்தான அதிபதி சுக்கிரன் லாபஸ்தானமான கன்னி ராசியில் இருந்தால் நீச்சம் பெற்ற அமைப்பை பெற்றாலும் நான்கில் ஒரு பங்காவது நன்மையுண்டு. ஒருக்கால் புதனும் அங்கிருந்து விட்டால் சுக்கிரனுக்கு  நீசம் பங்கம் ஏற்பட்டு மனைவி வழியாக ராஜ யோக பலனை அந்த ஜாதகருக்கு ஏற்படுத்தி கொடுத்து விடும். 

எந்த ஸ்திர - உபய லக்னமானாலும் , களத்திர அதிபதி லாபஸ்தானம் பெற்று அவனோடு  பூமி காரனான செவ்வாயும்  சேர்ந்தால் வீடு - நிலம் போன்ற ஸ்திர சொத்துக்கள் ஜாதகனை வந்தடையும். புதன் சேர்ந்தால், மனைவி கல்வி வளம் பெற்று உத்தியோகம் செய்து ஜீவிப்பவளாக இருப்பாள். 


லாபாதிபதி களத்திர ஸ்தானம் பெற்றாலும் , மனைவியால் சொத்து சேரும். அதுபோலவே பாக்கியாதிபதியான ஒன்பதாம் வீட்டு உடைய கிரகமும் , ஏழுக்கு  உடைய கிரகமும் ஒன்று கூடினாலும்  மனைவியால் சொத்து ஏற்படலாம். பாக்கிய ஸ்தானம் என்று சொல்ல  கூடிய ஒன்பதாம் இடத்தில் களத்திர ஸ்தான அதிபதியான ஏழாம் வீட்டு அதிபதி இருந்தால் மனைவியால் சொத்து சேரும். 

இவர்களுடன் எந்த கிரகம் சேருகிறதோ அந்த காரக விசேஷத்தால் மனைவி மூலம் சொத்து கிடைக்கும். இவை மட்டுமல்லாமல்  லக்னத்துக்கு இரண்டாம் இடமான தனாதிபதியின் நிலையையும் நன்கு கவனிக்க வேண்டும். என்னதான்  மனைவி மூலம் சொத்து கிடைத்தாலும் தன ஸ்தானாதிபதி என்று சொல்ல கூடிய லக்னத்துக்கு இரண்டாம் இடத்துக்கு அதிபதி கெட்டிருந்தால் எல்லாம் தேய்ந்து விடும். கெட்டிருப்பது என்றால் பகை - நீசம் பெற்றிருப்பதும் . லக்னத்துக்கு ஆறாம், எட்டாம் , பன்னிரெண்டாம் இடங்களில் மறைவதும் ஆகும். 

பாக்கியாதிபதியின் சேர்க்கையும் பாக்கிய ஸ்தானத்தில் களத்திர ஸ்தான அதிபதியும் இருந்தால் மனைவி மூலமாக சொத்து வரும் என்று சொல்லி இருக்கிறேன். இங்கே இந்த பாக்கியம் ஸ்திர லக்னமாக கொண்ட ரிஷபம் - சிம்மம் - விருச்சிகம் - கும்பம் - போன்ற லக்ன காரர்களுக்கு ஆகாது என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன். காரணம் இந்த நான்கு ஸ்திர லக்னங்களுக்கும் பாக்கிய ஸ்தானம் ஒரு பாதக ஸ்தானமாகும். 


உதாரணத்துக்கு ரிஷப லக்னகாரர் ஒருவருக்கு களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் பாக்கிய ஸ்தானமான மகரத்தில் உச்சம் பெறுகிறார் என்று கொள்வோம். ஆனால் உச்ச்சமடைந்தும் பிரயோஜனமில்லை , காரணம் ஸ்திர லக்னமான  ரிஷப லக்னகாரர்களுக்கு ஒன்பதாம் இடம் ஒரு பாதக ஸ்தானமாகையால் மனைவியால் லாபம் ஏற்படுவதற்கு பதில் அதிருப்திகரமான பலன்களே ஏற்படும். மற்ற லக்ன காரர்களுக்கும் இந்த அமைப்பை பொருத்தி பார்க்க வேண்டும். 

எனவே மனைவியால் சொத்து சேர வேண்டும் என்று பார்க்கும் பொழுது ஜோதிடர்கள் மேலே சொன்ன பல்வேறு கிரக அமைப்புகளை கொண்டு பலன் சொல்வது மிகவும் முக்கியமாகும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment