Home » » இன்று ஏப்ரல் 28 - 2021 புதன் கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

இன்று ஏப்ரல் 28 - 2021 புதன் கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                 

                                              இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி  - 28 - 4 - 2021 - சூரியனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 19 - சூரியனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 55 - சூரியனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - புதன் 

இன்று 28 - 4 - 2021 புதன் கிழமை பிறந்தவர்களின் பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 55; இது புதனின் ஆதிக்க எண்ணான 5 ம் எண் இரண்டு முறை வந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 55 ம் துராசியில் வரக்கூடிய சூரியனின் நீச்சமடைந்த  எண்ணாகும் . அதி சூக்ஷமான இந்த இந்த எண் வெகு அற்புதமான  அறிவை தரும் . சத்ரு ஜெயம் என்றும் ஆக்கல் அழித்தல் என்றும் மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது . 


ஆறாவது அறிவு என்று கூறப்படும் பிரமிக்கும்படியான சக்தியும் இவர்களிடம் காணப்படும் . பேரறிவு உடல்பலம் மனபலம் நீதி நேர்மை இவை எல்லாம்  இருந்தும் கூட சரியான வாழ்வை அமைத்து கொள்ள தடுமாறுவார்கள் . உற்பத்தி செய்தல் ஆக்கல் அழித்தல் சத்ரு ஜெயம் சூட்சும அறிவு பிரமித்தக்க அறிவாற்றல் போன்றவையும் உண்டு. 

எதிரிகளை வெல்லும் மனபலமும் பேரறிஞர் என்ற புகழும் இந்த எண்ணின் சிறப்பம்சமாகும் . அறிவு கணிப்பொறியை போல வெளிப்படுதல் இந்த எண்ணை பெயராக உடையர்களுக்கு உண்டாகும் . கல்வி விதை கணிதம் விஞ்ஞானம் எழுத்து பேச்சு ஆகிய துறைகளில் சிறப்பும் காவல் துறைகளில் உள்ளவர்களுக்கு எதிரிகளை அழிக்கும் சக்தியும் உண்டாகும் . 


தங்களின் குடும்ப வாழ்வில் சிறு பிரச்சனைகளுக்கு பிறகு சந்தோசம் உண்டு . விரோதிகளிடமிருந்து பாதுகாப்பு தரக்கூடிய வன்மை இந்த எண்ணிற்கு உண்டு . பிறப்பு உறுப்பு சம்பந்தமான நோய்கள் இருந்தால் குணமாகும் . சூரியனின் நீச்சமடைந்த எண் என்பதால் பெயர் எண் இந்த 55 ம் எண்ணில் அமைந்தாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்களில் வாழ்க்கை அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 


                                              அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ் திசை - கிழக்கு 
அதிர்ஷ் வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ் மோதிரக்கல் - மஞ்சள் வைரம் அல்லது புஷ்பராகம்
அதிர்ஷ் தினம் - ஞாயிறு - வியாழன் - திங்கள்
அதிர்ஷ் தேதி - 1 - 10 - 19 - 28 - 3 - 12 - 21 -30 - 2 - 11 - 20 - 29 - 5 - 14 - 23 - 
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A I J B K R C G L S E H N
அதிர்ஷ் உலோகம் - தாமிரம் . தங்கம் 
அதிர்ஷ் தெய்வ வழிபாடு - சிவன் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - கிருத்திகை உத்திரம் உத்திராடம்

இன்று 28 - 4 - 2021 ல் பிறந்தவர்களின்  ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 55  ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மாறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அடுத்துரைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .

இன்று ஏப்ரல் 28  ல் பிறந்த பிரபலங்கள் : 

ஜேம்ஸ் மன்றோ - அமெரிக்காவின் 5வது குடியரசு தலைவர் ( பிறப்பு 28 - 4 - 1758 )
சமந்தா ருத் பிரபு - இந்திய தெலுங்கு திரைப்பட நடிகை (பிறப்பு - 28 - 4 1987)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment