ராகு கேதுவால் குழந்தை செல்வம் கிடைக்க தாமதம் ஏற்படுமா ? பெண்ணாகவே பெற வேண்டுமா ? இல்லை கருமம் செய்வதற்கு ஆண் குழந்தை பெற இயலுமா ? என்பதற்கான விதி முறைகள் பின்வருமாறு :
லக்னத்திலிருந்து 7 ம் பாவகம் 7 ம் அதிபதியும் ஒருவருக்கு உடல் உறவில் ஏற்படும் ஆசையை தூண்டும் இடமாகும் .
8 ம் இடம் 8 ம் இடத்துக்குடைய கிரகம் செக்ஸ் உறுப்புகளின் தன்மையை குறிப்பவை . இவை இரண்டும் பாதிக்கப்படுமானால் அதாவது ராகு கேது மற்றும் பாவ கிரகங்களின் சம்பந்தம் ஏற்படுமானால் உயிரணுவில் சக்தி குறைபாடு உண்டாகும் .
5 ம் பாவத்திற்கு 8 ம் பாவகம் 12 ம் பாவமாகும் . இந்த 12 ம் வீட்டுக்கு உடைய கிரகம் பலமற்று இருந்தால் குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படும் .
சூரியன் உடல் உறவில் சக்தி திறனை குறிக்கும் கிரகமாகும் . சுக்ரன் ஆண்களின் விந்துவின் சக்தியை குறிக்கும் கிரகமாகும் . சந்திரன் மனதில் எழும் எழுச்சியை அதாவது தூண்டும் கிரகம் . இந்த மூன்று கிரகங்களும் பாதிக்கப்படுமானால் உடல் உறவில் ஆசை நிராசையாகவே அமைந்துவிடும்
இந்த பாவகத்தில் அல்லது இந்த கிரகங்களுடன் ராகு கேதுக்கள் சம்பந்தம் பெருமானால் குழந்தை செல்வம் பெற முடியாமல் தோஷத்தை ஏற்படுத்தும் .
5 ம் இடத்துக்கு அதிபதி 7 லும் 7 ம் அதிபதி 5 லும் பாதிக்கப்பட்டிருந்தால் புத்திர தோஷத்தை ஏற்படுத்தும் .
5 - 7 ம் இணைந்தும் பரிவர்த்தனை பெற்றும் காணப்பட்டு ராகு கேதுவுடன் சம்பந்தம் பெறுவது ஆண் குழந்தைக்கு தோஷத்தை ஏற்படுத்தும் .
1 - 5 - ம் இடத்துக்குடைய கிரகங்களில் தொடர்பு பிள்ளையை தத்து எடுக்கும் நிலைய ஏற்படுத்தும் .
ராகு 5 ல் இருந்து செவ்வாயால் பார்க்கப்பட்டாலும் அல்லது செவ்வாய் 5 ல் இருந்து ராகுவால் பார்க்க பட்டாலும் சர்ப்ப தோஷம் தரும் .
5 - 6 - 7 - ம் வீட்டுக்குடைய கிரகங்கள் இணைந்து ராகு கேதுவுடன் சம்பந்தம் பெருமானால் சந்ததியே இல்லாத நிலையாகும் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
Post a Comment